எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் விடுமுறை- மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் 

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் இன்று நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படையின் 55-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்,  வீரர்கள் தங்களது குடும்பத்தாருடன் இணைந்திருப்பதற்காக ஆண்டுக்கு 100 நாள் விடுமுறை அளிக்க மத்திய அரசு தன்னால் இயன்றதை செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், துணை ராணுவத்தினருக்கு உள்ளதுபோல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் ஜம்முவில் இருந்து டெல்லி வருவதற்கு இலவச விமான வசதி, வீரதீர விருதுகளை பெற்ற வீரர்கள் மற்றும் கடமையின்போது வீரமரணம் அடைந்தவர்களின் மனைவியருக்கு டெல்லியில் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட சில அறிவிப்புகளையும் அவர் இன்று வெளியிட்டார்.