மதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு – ஆட்டோவில் வந்த கும்பல் கைவரிசை..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை, வில்லாபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்தவர் பத்திரகாளி 34. இவர், இவருக்கு சொந்தமான பத்தாயிரம் மதிப்புள்ள ஆடு ஒன்றை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகர் முதல் தெருவில் கட்டி வைத்திருந்தார். அங்கு ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்த ஆட்டை திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, பத்திரகாளி, ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆடு திருடிய கும்பலை தேடி வருகின்றனர்.

– மதுரை ரவிசந்திரன்