இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்கான நூலகம்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கான நூலகம் மதுரையில் தொடங்கப்பட்டது. இந்த நூலக செயல் பாட்டினை, சார்பு நீதிபதி வி.தீபா துவக்கி வைத்தார். கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் மதுரை மண்டல இணை இயக்குனர். டாக்டர்.பி.முத்துராமலிங்கம் நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார். திருநங்கை,பிரியாபாபு தலைமையுரை ஆற்றினார். வழக்கறிஞர். முத்துக்குமார், பாத்திமா கல்லூரி பேராசிரியர். ரோஸ்லின்மேரி, அமெரிக்கன் கல்லூரி. பேராசிரியர். அருளப்பன், காந்திகிராமம் பல்கலைகழக பேராசிரியர். ஆனந்தவிஜயன், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர். கவிதா, சமூக ஆர்வலர்கள். விக்ரமகர்ணா, சோலைஅழகு, ஷர்மிளாதேவி, திவ்யபாரதி, தீபாநாகராணி, துர்கா, கலந்து கொண்டனர். முடிவில், திருநங்கை. டாக்டர். ஷோலு நன்றி கூறினார்.

– மதுரை ரவிசந்திரன்