உக்ரைனில் இருந்து 630 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் – மீட்புப் பணியில் இந்திய விமானப்படை..!

Scroll Down To Discover
Spread the love

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியர்களை மீட்கும் பணியான ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மூன்று சி-17 விமானங்கள் நேற்றிரவு 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ருமேனியா, ஹங்கேரியில் உள்ள வழியாக வந்தடைந்தது.

இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘ஆபரேஷன் கங்கா மேலும் மூன்று ஐஏஎப் சி-17 விமானங்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரியில் உள்ள விமானநிலையங்களில் இருந்து உக்ரைன் மோதலில் பாதிக்கப்பட்ட 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஹிண்டன் விமான தளத்திற்குத் திரும்பின.

கடந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் 200 இந்தியர்கள் வீதம் மொத்தம் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியவர்கள் இந்தியாவுக்கு திருப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.இதுமட்டுமின்றி வார்சாவில் சில மாணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்களுடன் தங்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் போலந்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.