சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்ற நிலையில், சென்னை மேயராக ரிப்பன் மாளிகையில் பிரியா ராஜன் (எ) ஆர்.பிரியா பொறுப்பேற்றிருக்கிறார்.

சென்னை மேயர் பதவிக்கு ஆர்.பிரியாவும், மதுரை மேயர் பதவிக்கு இந்திராணியும் போட்டியிடுவதாக நேற்று திமுக அறிவித்திருந்தது. தற்போது இருவரும் மேயராக தேர்வு பெற்று, பொறுப்பேற்றுள்ளனர். இவர்களில் சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு தமிழ்நாடு மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை அளித்தனர். முன்னதாக பிரியா ராஜனுக்கு, மேயருக்கான அங்கியை வழங்கினார் ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

போட்டியின்றி மேயராக தேர்வாகியுள்ள பிரியா ராஜன், மிகவும் இளம் வயதில் (28 வயது) சென்னை மேயராகி இருக்கிறார். சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயர் இவர்தான். இன்று இதுதொடர்பாக நடைபெற்ற மறைமுக தேர்தலில், அதிமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பாஜக கவுன்சிலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு சற்றுநேரத்தில் சற்றுநேரத்தில் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டி இல்லையெனில் ஒருமனதாக தேர்வாக வாய்ப்புள்ளது.