“ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்’’ – நேதாஜிக்கு பிரதமர் மோடி மரியாதை

Scroll Down To Discover
Spread the love

இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமது இந்திய தேசத்திற்கு நேதாஜியின் மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அனைத்து நாட்டு மக்களுக்கும் பராக்கிரம் திவாஸ் வாழ்த்துக்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையான அஞ்சலிகள்.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தி அன்று அவருக்கு தலைவணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் இந்த நேரத்தில் இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கற்களாலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும். நேதாஜிக்கு இந்தியா கடமைப்பட்டுள்ள நிலையில் அவரது அடையாளமாக இந்த சிலை இருக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.