ஐதராபாத்தில் பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பறந்து விழுந்த கார்..!

Scroll Down To Discover
Spread the love

ஐதராபாத்தில், ராய்துர்க்கம் பகுதியில் உள்ள பயோடைவர்சிட்டி மேம்பாலத்தில், அதிவேகமாக சென்ற கார், வளைவில் திரும்பும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பறந்துசென்று கீழே விழுந்தது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்த மேம்பாலத்தில் 40 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில் அதையும் மீறி, 104 கிலோமீட்டர் வேகத்தில் கார் சென்றதே விபத்துக்கான காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.