கொரோனா பரவல் எதிரொலி : டெல்லி குடியரசு தின விழா 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 24ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதில் 19ஆயிரம் பேர் மத்திய அரசின் அழைப்பின் அடிப்படையில் பங்கேற்பர். பொதுமக்கள் 5ஆயிரம் பேர் டிக்கெட் பெற்று கொண்டு கலந்து கொள்வார்கள். இந்தாண்டு வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் 25ஆயிரம் பேருக்கு அனுமதி தரப்பட்டது. இதற்கிடையே, குடியரசு தின விழா இனி ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.