பணி நீட்டிப்பு வழங்க கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு.!

Scroll Down To Discover
Spread the love

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு வழங்க கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 2018-ல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில், மேலும் பணி நீட்டிப்பு வழங்குமாறு, பொன்மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் இன்னும் பல வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உரிய வசதிகள் செய்துதராதது தொடர்பாக, தமிழக அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யும் வரை சிறப்புக் குழுவின் பணிக்காலத்தை நீட்டிக்குமாறு கோரியுள்ளார்.