ஊழலை ஒழிக்க புதுமையான முறைகளை கையாள வேண்டும்-பிரதமர் மோடி அறிவுரை.!

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் தலைமை கணக்குத் தணிக்கைத் துறை அலுவலகம் சாா்பில், கணக்குத் தணிக்கை தொடா்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பின்னர் உரையற்றினார். அவர் பேசியதாவது, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிஏஜி அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த இலக்கை எட்டுவதற்கு கணக்குத் தணிக்கைத் துறை முக்கியப் பங்காற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொழில் சாா்ந்த முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதுமையான வழிமுறைகளை தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் கண்டறிய வேண்டும் என கூறினார். அரசுத் துறைகளில் ஊழல்களை வேரறுப்பதற்கு புதுமையான முறைகளை கையாள வேண்டும் என்றும், அரசு நிா்வாகத்தை மேம்படுத்துவதில் கணக்குத் தணிக்கையாளா்கள் சிறந்த பங்களிப்பு செலுத்த முடியும் என்றாா் அவா். மேலும் மிக துல்லியமான கணக்கு தணிக்கையை அனைவரும் விரும்பும் நிலையில், தணிக்கையாளர்கள், தங்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.