வெப்சீரிஸாக உருவாகும் போபால் விஷவாயு விபத்து சம்பவத்தில் நடிக்கும் மாதவன்..!

Scroll Down To Discover
Spread the love

பல்வேறு நிஜ சம்பவங்களை மையமாக வைத்து பல வெப்சீரிஸ்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சில நிஜ கதைகள் வெப்சீரிஸாக ஓடிடியில் வெளியாகி, மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

அந்த வரிசையில் போபால் விஷவாயு விபத்து சம்பவம் கதையாகிறது. 1984 டிசம்பர் 2ம் நாள் நள்ளிரவு யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் வாயு கசிந்ததால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். 25 ஆயிரம் பேர் பலியாகினர்.

இந்த சம்பவம்தான் இப்போது தி ரயில்வே மேன் பெயரில் வெப்சீரிஸ் ஆக தயாராகிறது. இதில் மாதவன், கே.கே.மேனன், பாபில் கான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.பாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ் சோப்ராவின் யஷ்ராஜ் பிலிம்ஸ் இந்த வெப்சீரிஸை முதல்முறையாக தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு டிசம்பரில் இது வெளியாக உள்ளது.