கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம்… பிரதமர் படம் இல்லை: பேனரை அவிழ்த்த பாஜக…!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில், கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருந்த இடத்தில், பாஜகவினர் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில், பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்று கூறி அங்கிருந்த பேனரை அவிழ்த்து விட்டு சென்றனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.க. வினர் நடத்திய கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும்போது, பிரதமர் படம் இடம் பெறவேண்டும் என வலியூறுத்தி வருகின்றனர்.