சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு..!

Scroll Down To Discover
Spread the love

மண்டல பூஜை, மகர விளக்குக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தலாம். பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தங்கவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.பரிமலை கோயிலுக்கு செல்ல பம்பையில் மதியம் 2 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூகு வெளியிட்டுள்ள அறிக்கையில்:- சபரிமலையில் இந்த ஆண்டு பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. எனவே கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட மாட்டாது. சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பெண்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை” என்று கூறப்பட்டு உள்ளது.