எகிறும் தங்கம் விலை : தங்கம் சவரனுக்கு அதிரடியாக 528 ரூபாய் உயர்ந்தது..!

Scroll Down To Discover
Spread the love

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.528 உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் தொடங்கியதும் விலை குறைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். அதன் பின்னர் விலையேற்றம் மீண்டும் தொடங்கியது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 66 உயர்ந்து ரூ. 4620- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.528உயர்ந்து ரூ.36960-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39872-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1.30 பைசா குறைந்து ரூ 70.60-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 70,600 ஆக உள்ளது