நவம்பர் 17ம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!!

Scroll Down To Discover
Spread the love

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெளியூர் பக்தர்களுக்கு இந்த வருடம் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. அதே சமயம் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கிரிவல பாதையையொட்டி இருக்கும் டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே சமயம் தனியார் பார்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மது விற்பனை அங்காடிகளிலும் நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்கள் மூடவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.