திட்டத்தில் கமிஷன் : தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் உறுதி.!

Scroll Down To Discover
Spread the love

தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால் 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

இன்று தனது தொகுதியாக கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிகப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தி.நகர் பகுதியில் மழை நீர் தேங்கியது குறித்து நிபுரணர்கள் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு முதல்வர் கூறியதாவது; “தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றப்பட்டுள்ளது. முறையாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து திட்டத்திற்காக நிதி பெற்றும் பணிகள் நடைபெறவில்லை. எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.