வருவாய் இல்லாத ஆலயங்களின் பூஜைக்கு அரசு உதவ வேண்டும் – வி.எச்.பி. கூட்டத்தில் வலியுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் வருவாய் இல்லாத கிராமக் கோயில்களில் தினசரி பூஜைக்கு, உதவ தமிழக அரசு முன்வர வேண்டும் என, மதுரையில் நடைபெற்ற வி.எச்.பி. கூட்டத்தில் வலியூறுத்தப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சந்திர சேகரன் தலைமை வகித்தார்.
பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் வேலுமணி வரவேற்றார். கோயில் பூஜாரிகள் பேரவை நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.