ஆர்யன் கான் மீதான போதை பொருள் வழக்கு : என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே திடீர் பணியிட மாற்றம்..!

Scroll Down To Discover
Spread the love

மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்தபோது அதிரடியாக நுழைந்த மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு, பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை கைது செய்தது.

இந்த வழக்கை மும்பை மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் சமீர் வான்கடே விசாரித்தார். இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க இவர் ரூ.25 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், சமீர் வான்கடேவை மும்பை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்வார்கள் என்ற நிலை இருந்து வருகிறது. ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கிய நிலையில், இவர்கள் மீதான வழக்கின் விசாரணையை டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுக்கு மாற்றி, நேற்றிரவு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதால், வழக்கு விசாரணை மாற்றப்பட்டதாக கூறியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு, வான்கடே தொடர்ந்து மும்பை மண்டல இயக்குனராக நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.