தீபாவளி பண்டிகை : ஆவின் பொருட்கள் ரூ. 83 கோடிக்கு விற்பனை – பால்வளத்துறை அமைச்சர் தகவல்

Scroll Down To Discover
Spread the love

தீபாவளி பண்டிகைக்கு இதுவரை இல்லாத அளவில் 83 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் உறுதித்தன்மை, உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதி, மதகுகளின் உறுதி போன்றவற்றை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்நிலையில் உள்ளதாக கூறினார். கடந்த தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் கூறினார்.