கோயில் நிலத்தில் உள்ள குயின்ஸ்லேண்ட்டை அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குயின்ஸ் லேண்ட் ரிசார்ட்டை அகற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே குயின்ஸ் லேண்ட் என்னும் தனியாருக்குச் சொந்தமான பொழுது போக்கு பூங்கா உள்ளது. குயின்ஸ் லேண்ட் அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என அமைச்சர் சேகர் பாபு முன்னர் அறிவித்தார்.

அதோடு சட்டப்போராட்டம் நடத்தி குயின்ஸ் லேண்ட் அமைந்துள்ள நிலம் கோவில் நிலம் என உறுதிப்படுத்தி அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் குயின்ஸ் லேண்டு நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குயின்ஸ் லேண்ட் ரிசார்ட்டை அகற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.