ஆட்சியில் சமபங்கு என்பதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை- அமித்ஷா பேட்டி..!

Scroll Down To Discover
Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின.

பின்னர் நடந்த அரசியல் குழப்பங்கள் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக உள்துறை மந்திரியும், பாஜக தலைவருமான அமித்ஷா தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் அவர் கூறியது..

பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரி ஆவார் என தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தோம். ஆனால் சிவசேனா தற்போது புதிதாக கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டசபை பதவிக்காலம் முடிந்த பின்னரே, கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்குமுன் எந்த மாநிலத்திற்கும் ஆட்சி அமைக்க 18 நாட்கள் கொடுக்கப்பட்டதில்லை. தற்போது கூட பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை அணுகலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன  என குறிப்பிட்டுள்ளார்.