ரூ.10 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி..!

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் ஏலம் விடப்படும் நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் ஈட்டி, 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

பிரதமர் தமோடிக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் பிரதமருக்கு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள் அளித்த ஈட்டி, பாக்சிங் கிளவ்ஸ், அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று, கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்துக்கு உதவுமாறு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக ஏலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகபட்சமாக ஒலிம்பிக்‍கில் தங்கப்பதக்‍கம் வென்ற நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி மற்றும் லவ்லினா பயன்படுத்திய பாக்சிங் கிளவ்ஸ், தலா 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளன.