ஆர்.டி.ஓ.அலுவலகம் வராமலேயே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம் – போக்குவரத்துதுறை அமைச்சர்

Scroll Down To Discover
Spread the love

ஆர்.டி.ஓ.அலுவலகம் வராமலேயே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம் என போக்குவரத்துதுறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளதாவது: பொதுமக்கள் ஓட்டுனர் உரிமைகளை ஆதார் மூலம் ஆன்லைன் வழியாக பெறும் வகையில் வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆர்டிஓ அலுவலகம் வராமலேயே ஆதார் மூலம் ஆன்லைனில் சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்படும் .மேலும் 500 மின்சார பஸ்கள், 2 ஆயிரத்து 213 டீசல் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்.

மேலும் மதுரை தெற்கு ஆர்டி ஓ., அலுவலகத்திற்கு ரூ.5.28 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். கோவை வடக்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு4.98 கோடி செலவில் புதிய கட்டடம் ,திருத்தணி ஆர்டிஓஅலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்படும். அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.