கோவாச்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்.!

Scroll Down To Discover
Spread the love

கோவாச்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்ன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய இந்திய மருந்து கட்டப்பட்டு இயக்குனர் அனுமதி அளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான ஆய்வுக்கு தற்போது மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. இந்த ஆய்வு மூலம் கொரோனாவுக்கு எதிரனாக நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதில் 300 தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் 18 பேருக்கு முதல் தவணையாக கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 வார இடைவெளிக்கு பின்னர் 2வது தவனையாக கோவாக்சின் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதில் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வெவ்வேறு நிறுவனங்களின் இரு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் மாற்றங்களை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரு வேறு தடுப்பூகளை இணைத்து பயன்படுத்துவதற்காக ஆய்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.