திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு.!

Scroll Down To Discover
Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி ஆகஸ்டு மாதத்தில் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யுமாறும் திருமலை திருப்பதி-தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.