வெள்ளையம்பட்டியில் ஆடு திருட வந்தவர்களில் ஒருவர் கைது, இருவர் தலைமறைவு

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வெள்ளையம்பட்டியில் ஆடு திருட வந்தவர்களில் ஒருவர் பிடிபட்டார்.பாலமேடையடுத்த வெள்ளையம்பட்டி கூட்டுறவு சங்கம் அருகே, பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியம், பட்டா புத்தகத்தை தணிக்கை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக இருட்டில் சென்றவர்களை பிடித்து விசாரித்ததில், இருவர் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட நபரிடம், போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஊரில் ஆடுகளை திருட வந்ததாகவும், மதுரை மேலமடை, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சிவக்குமார் . வயது 22. என,தெரிய வந்தது. இது குறித்து பாலமேடு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தும், தலைமறைவாகி விட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.

செய்தி: Ravi Chandran