விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி சங்கர் நகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார் இந்த பகுதியில் அதிக அளவில் வீடுகள் இல்லாததால் ஆள் நடமாட்டம் குறைந்த அளவிலே உள்ளது .
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த2 மர்ம நபர்கள் நிறுத்தி வைக்கப்படிருந்த வாகனத்தை பழுதான வாகனத்தை இழுத்துச் செல்லுவது போல் நூதன முறையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு குறித்து பாலமுருகன் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் நூதன முறையில் பழுதான வாகனத்தை எடுத்துச் செல்வதுபோல் இரு சக்கர வாகனத்தில் திருடிச் செல்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...