பொது மக்களுக்கு தடையின்றி காய்களில் கிடைக்க தோட்டக்கலை மூலம் நகராட்சி நிர்வாகம் 50 வாகனம் ஏற்பாடு.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி கிடைக்க தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகம் வார்டு வாரியாக சென்று விற்பனை செய்ய தடுப்பூசி போட்ட நபருக்கு மட்டும் அனுமதி வழங்கி அவருக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளது இவர்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்ய 50 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.

அரசு நிர்ணயம் செய்த விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அவர்களுக்கு மொத்தமாக காய்கறி விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறும்போது:- வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து அவர்கள் மூலம் நகர் மற்றும் கிராம பகுதிக்கு விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். இதேபோல், தோட்டக்கலைத்துறை சார்பில் கிராம பகுதியில் விவசாயிகள் விளைவிக்கும் கீரை போன்ற காய்கறிகள் மகளிர் குழு மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவருக்குமே அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிகமான விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவளுக்கு அறிவுரை வழங்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
செய்தி: Ravi Chandran