மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்ச ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பார்த்தசாரதி நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக மதுரை எஸ் எஸ் காலனி காவல்த்துறையினரும் ரகசிய தகவல் கிடைத்தின் அடிப்படையில், எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் நடத்திய சோதனையில், கார்த்திக் என்பவரது முன் நிறுத்தப்பட்டிருந்த கொரியர் வேனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய சோதனையில் செய்தபோது அந்த வேனில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகள் இருந்தது.உடனடியாக அந்த குட்கா மூட்டைகள் மற்றும் வேனை கைப்பற்றிய போலீசார் பான் மசாலா, குட்கா வைத்திருந்த கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கார்த்திக் என்பவர் மீது ஏற்கனவே இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்ததாக. எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...