காரியாபட்டியில் தீயணைப்பு துறையினர் கொரோனா தடுப்பு பணி மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கொரோனா வராமல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காவல்துறை பேரூராட்சி சுகாதார துறை மற்றும் வருவாய்துறையினர் கொரோனா தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர். காரியாபட்டி பேரூராட்சி மற்றும் தீயணைப்புத் துறை சார்பாக கொரோனா பரவாமல் தடுக்க நகர் வீதி, பஸ் நிலையம் மீன் இறைச்சி கடை பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால்சாமி சப்.இன்ஸ்பெக்பர் ஆனந்த ஜோதி ஆகியோர் மேற்பார்வையில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
செய்தி: Ravi Chandran

Leave your comments here...