பாஜக அலுவலகத்தில் தாக்குதல் : பாஜகவினார் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மேலமடை பகுதியில் அமைந்துள்ள மதுரை மாவட்ட புறநகர் பாஜக அலுவலகத்தின் மீது கடந்த ஞாயிற்றுகிழமையன்று மர்மநபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு அலுவலகத்தில் இருந்த இருக்கைகளை உடைத்து, பிரதமர் மோடியின் படத்தை கிழித்துசென்றனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி மதுரை மாவட்ட பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.