திறன் பெற்ற இந்திய பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

Scroll Down To Discover
Spread the love

திறன் பெற்ற இந்திய பணியாளர்களைஜப்பானுக்கு அனுப்பும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர்” தொடர்பான அமைப்பு முறையை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிற்கான இந்தியா- ஜப்பான் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செவிலியர் பணி, கட்டிட தூய்மைப் பணி, சரக்கு கையாளும் தொழில், இயந்திரங்கள் உற்பத்தி, மின்னணு மற்றும் மின்சக்தி தகவல் தொடர்பான தொழில், கட்டுமானம், கப்பல் கட்டுதல், வாகன பராமரிப்பு, வான்வழிப்பயணம், விடுதி, விவசாயம், மீன்வளம், உணவு மற்றும் குளிர்பான உற்பத்தி, உணவு சேவை தொழில் உள்ளிட்ட 14 தொழில் துறைகளில், தகுதியுள்ள, திறன்மிகு இந்திய தொழிலாளர்கள், ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுக்கும். ஜப்பானில் பணிபுரியப் போகும் இந்திய தொழிலாளர்களுக்கு, “குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர்” என்ற உறைவிட அந்தஸ்தை ஜப்பான் அரசு வழங்க உள்ளது.

இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் கூட்டு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழு, உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் பணியைக் கண்காணிக்கும். இந்தியாவிலிருந்து திறன்மிகு பணியாளர்களும், நிபுணர்களும் ஜப்பான் நாட்டிற்கு சென்று பணிபுரிய இந்த உடன்படிக்கை உதவும்.