பாலியல் கொடுமை செய்ய முயன்றவனை தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண் : விடுவித்த எஸ்.பி அரவிந்தன்

Scroll Down To Discover
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜித் குமார் (25) என்ற இளைஞர், அவரைப் பின்தொடர்ந்து கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.படுகாயம் அடைந்த இளைஞர், சிறிது நேரத்திலேயே இறந்தார். சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண், இளைஞரிடமிருந்து கத்தியைப் பிடுங்கி, தற்காப்புக்காக அஜித்குமாரைக் கத்தியால் குத்தியுள்ளார்

இதைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சம்பவத்தை விவரித்து சரண் அடைந்தார். இளம்பெண் அளித்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தற்காப்பு காரணமாக அந்த பெண் கொலை செய்ததால் சட்டப்பிரிவு 106-ன் படி எஸ்.பி அரவிந்தன் விடுதலை செய்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
https://twitter.com/Tr_Gayathri/status/1346673449456996352?s=20
இந்த தகவல் குறித்த எஸ்.பி அரவிந்தனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலர் தமிழக அரசையும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.