பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாநகர் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது.

அதனால் , பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும், இருந்த பள்ளத்தை பழங்காநத்தம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உதவியுடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய் ஜெசிபி, மூலம் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்ததால் பொது மக்களின் பாராட்டை காவல் ஆய்வாளர் பெற்றார்.