காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளை சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பாராயணம்.!

Scroll Down To Discover
Spread the love

ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளையின் சார்பில் பெசன்ட் ரோடு சொக்கிகுளம் மடத்தில் உலக நன்மை கருதி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீஶ்ரீஶ்ரீ சங்கர விஜயேந்திர சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
அனுகிரகத்தால், 16.11.2020 முதல் 30.13.2020 வரை தொடர்ந்து 45 நாட்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் வேத வித் பன்னர்களால் தினமும் மாலை 5.மணி முதல் 6.30 மணி வரை நடத்தப்பட்டு 30.12.2020 அன்று ஆசீர்வாத மந்த்ரங்களுடன் நிறைவு பெற்றது.

ஶ்ரீமடத்தின் மதுரை கிளைத் தலைவர் டாக்டர் டி ராமசுப்பிரமணியன், செயலாளர் ஏ பி சுந்தர், பொருளாளர் கே ஶ்ரீ குமார், துணைத் தலைவர் சுப்பிரமணியன், இணைச் செயலாளர் ஶ்ரீவத்ஸன் வெங்கட ரமணி , புரவலர்கள் கணபதி சர்மா ஷ்யாம் ,ராதாகிருஷ்ணன் , ஶ்ரீனிவாசன் சங்கர ராம் ஶ்ரீராம் அஸ்வின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.