மாநகராட்சி குப்பை கிடங்கில் குழந்தை சடலம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை அருகே மாநகராட்சி குப்பை கிடங்கில் குழந்தை சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். திருப்பரங்குன்றம் வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இதில் 6 மாத குழந்தை உடல் பிணமாக கிடந்த வந்த தகவலை அடுத்து பரபரப்பாகக் காணப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது இங்கு ஒரு நாளைக்கு 200 லாரிகளில் வீதம் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன.இன்று காலை தரம் பிரித்து வைக்கப்பட்ட குப்பைகளில் ஆறு மாத குழந்தையின் சடலம் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து , ஊழியர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, வெள்ளக்கல் குப்பை கிடங்கிலிருந்து அவனியாபுரம் காவல் துறையினர் அதை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் , குப்பை எடுத்த இடம் எந்த பகுதி என ஆய்வு செய்து வருகின்றனர்.