கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம் ; 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதம்.!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று பசுவதை தடுப்பு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

பின்னர், கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவால், பசு மாடுகளை சட்டசபை வளாகத்திற்கு வரவழைத்து கோ பூஜை நடத்தினார். இதன் பின்னர் நேற்று இரவு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சட்டப்படி பசுக்களை கொல்வதற்கும், மாட்டிறைச்சியை கடத்துதல், சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுக்களை கொல்பவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். தொடர்ச்சியாக இந்த குற்றத்தில் ஈடுபட்டு சிக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். கடத்தல், விற்பனை, வாங்குபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கவும், சோதனை நடத்த போலீசாருக்கு அதிகாரம் அளிக்கவும் கர்நாடகா அரசு இயற்றிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குஜராத், உ.பி., மாநிலங்களை தொடர்ந்து, கர்நாடகாவும் பசுவதைக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.