33 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டவரை சென்னையில் கலால்துறையினரல் கைது .!

Scroll Down To Discover
Spread the love

33 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டவரை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து தங்களுக்கு தொடர்பில்லாத பல்வேறு நபர்களின் ஆவணங்களை வைத்து 100க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் பெயரில் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த நிறுவனத்திலிருந்து பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக போலியாக கணக்கு எழுதி வந்துள்ளனர். இப்படியாக 350 கோடி ரூபாய்க்கு போலி ரசீது எழுதி 33 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து அறிந்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டதுடன் வரி ஆலோசகர்கள் உள்ளிட்டோரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மூன்று பேரையும் விசாரித்த பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி, டிசம்பர் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.