மழையினால் சேதமடைந்த வீடு இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி மயிரிழையில் உயிர் தப்பினர் .!

Scroll Down To Discover
Spread the love

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பசும்பொன் தெருவில் பேச்சி கருப்பன் முனியம்மாள் ஆகிய இருவரும் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன. நேற்றைய முன்தினம் இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிச்சியம் பிரிவில் நடந்த வரவேற்பு விழாவில் மன்னாடிமங்கலம் ஜெ பேரவை ராஜபாண்டி கலந்துகொண்டு வீட்டுக்கு திரும்பும் வந்தார்.

அப்போது அவர் வீடு அருகே ஓட்டு வீடு சுவர்கள் சிறிது சிறிதாக இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட ராஜபாண்டி வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவரையும் வெளியேற்றினார். வெளியேற்றிய சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது. இதில் மயிரிழையில் கணவன்-மனைவி உயிர்தப்பினர் இருவரையும் வெளியேற்றி காப்பாற்றிய ஜெ பேரவை ராஜபாண்டி அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார் இடிந்த வீட்டில் மின் இணைப்பு மின் பணியாளர் உடனே துண்டித்து விட்டார். இதேபோல் குருவித்துறை வேலம்மாள் 67 மற்றும் நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்த முத்து இருளாயி 62 பஞ்சவர்ணம் 59 ஆகியோர் வீடுகளும் இந்த மழையினால் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த வீடுகளில் இருப்பவர்கள் மிகவும் வயது முதிர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த வாரம் ராயபுரத்தில் இருதய மேரி 70 என்ற மூதாட்டி வீடு இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.