அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது – பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் மேலவளவு, அய்யனார்புரம், சவுக்கு தோப்பு, கேசம்பட்டி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற மேலவளவு போலீசார் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த அழகர்சாமி உள்பட 8 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள் மற்றும் பணம் ரூ- 3200/-, 5 -இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, மேலவளவு போலிசார் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.