பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு : 15 நாட்கள் பெட்ரோல் நிலையம் நடத்த தடை விதித்த ஐ.ஓ.சி. அதிகாரி..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை ரயில்வே சந்திப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.

இதில் வழக்கறிஞர் ஒருவர் 300 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லியுள்ளார் அதற்கு ஊழியர் 300 ரூபாய்க்கு டெபிட் கார்ட் ஸ்வைப் செய்துள்ளார் பெட்ரோல் போட்டுக்கொண்டிருக்கும்போது ரூபாய் 225 மட்டும் பெட்ரோல் போட்டுவிட்டு கட் செய்துவிட்டார்.

இதை கவனித்த வழக்கறிஞர் ஏன் அளவு குறைத்து போட்டாய் 300 ரூபாய்க்கு பணம் எடுத்துக்கொண்டு 225 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போட்டு உள்ளாய் என கேள்வி எழுப்பினார். அதற்கு அங்குள்ள ஊழியர்கள் மழுப்பலாக பதில் அளித்துள்ளார் உடனடியாக அவர் முகநூல் பக்கத்தில் நேரடியாகவே அதை ஒளிபரப்பி உள்ளார்.

தற்பொழுது இவர் எடுத்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அடுத்து ,தொடர்ந்து புகார் எழுந்து வந்ததை கண்டு இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மதுரை மாவட்ட விற்பனை பிரிவின் துணை மேலாளர் அந்த பெட்ரோல் பங்கிற்கு 15 நாட்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும் தெரிவித்தார்.