விநாயகர், செண்பகமூர்த்தி அய்யனார், சோணை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

Scroll Down To Discover
Spread the love

மதுரை அருகே கோவில்பாபாகுடி அருள்மிகு விநாயகர், செண்பகமூர்த்தி அய்யனார், சோணை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கோயில் முன்பாக யாகசாலையில், கடஸ்தாபனம், கலசபூஜைகள், முதல் கால யாக வேள்விகள், பூர்ணாகுதி பூஜைகளும் நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள், நாடி சந்தானம், கலசபூஜைகள், மகாகும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அன்னதானம் வழங்குதல் போன்றவைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பங்காளிகள், சாமியாடிகள் செய்திருந்தனர்.