காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் : விரட்டியடித்த பிஎஸ்எப் வீரர்கள்

Scroll Down To Discover
Spread the love

காஷ்மீரில், எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படை வீரர்கள் விரட்டியடித்து வருகின்றனர். அவ்வபோது, பாகிஸ்தானில் இருந்து டுரோன் மூலமாகவும் ஆயுதங்கள் கடத்த முயற்சி நடக்கிறது. இதற்காக அங்கிருந்து டுரோன்கள் இந்திய எல்லைக்குள் வருகின்றன. இதனை இந்திய வீரர்கள் முறியடித்துள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரின் ஆர்எஸ்புரா செக்டாரில், சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தானிலிருந்து டுரோன் ஒன்று வந்துள்ளது. இதனையறிந்த பிஎஸ்எப் வீரர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தவே, அந்த டுரோன் உடனடியாக பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றுவிட்டது.