திருமங்கலம் அருகே தக்காளி ஏற்றிச் சென்ற வேன் மீது மோதி பைக்கில் சென்றவர் பலி

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பாலத்தின் மீது மோதி பைக்கில் சென்றவர் பலியானார்.

தென்காசி அருகே ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 33).இவர் தனது வேனில் மதுரை மார்க்கெட்டில் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளார்.

திருமங்கலம் கப்பலூர் பாலத்தில் உள்ள விமான நிலைய சந்திப்பு பகுதியில் வேன் சென்றபோது குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க இதனை நிறுத்த முயற்சி செய்ததில் வேன் கவிழ்ந்தது. பைக்கில் வந்த மதுரை குச வன்குளம் பகுதியை சேர்ந்த பூவலிங்கம் (33)என்பவர் கவிழ்ந்த வேனின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.