துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையின் 2வது சோதனை வெற்றி

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (QRSAM), சரியாக இலக்கை மீண்டுமொருமுறை தாக்கி வெற்றி அடைந்துள்ளது. ஏவுகணை சோதனைத் தொடரில் இது இரண்டாவது ஆகும்.

ஒடிசா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.42 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது. பன்ஷீ என்று அழைக்கப்படும் விமானி இல்லாத இலக்கு விமானத்தை மீண்டும் இந்த ஏவுகணை சரியாக தாக்கியது.

ஏவுகணை சோதனையின் வெற்றியை அடுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ- வின் விஞ்ஞானிகளைப் பாராட்டினார்.

கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற முதல் சோதனையிலும் இந்த ஏவுகணை சரியாக இலக்கைத் தாக்கி ஒரு புதிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.