திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

திருவண்ணாமலை தீப திருவிழா தோரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், தீப திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: திருவண்ணாமலை தீப திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. பவர்ணமி கிரிவலம் செல்லவும் தடை செய்யப்படுவதுடன், மாடவீதிகளில் நடக்கும் விழா ரத்து செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடக்கும்.

திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 5,000 பேருக்கு அனுமதி, தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மகாதீபத்தன்று மலை ஏற முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரணி தீபம், மகாதீபம் கோவிலினுள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதுடன், ஊடகங்கள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு மூலம் காணலாம். இவ்வாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.