வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி என்ஜிஓ-கள் அரசுக்கு எதிராக போராட தடை : கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுகின்றன. ஆனால், அந்த நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை என, அந்த தொண்டு நிறுவனங்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கு, கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது;

அதன் விபரம்:- குறைந்தது மூன்று ஆண்டுகள் செயல்பட்ட நிறுவனங்கள் மட்டுமே, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கோர முடியும்; பெற முடியும். மேலும், அந்த மூன்று ஆண்டுகளில், மக்கள் பணிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் செலவழித்திருக்க வேண்டும்.

வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வெளிநாட்டு நிதியுதவியை பெற அனுமதிஇல்லை. இவ்வாறு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.