மழை நேரத்தில் சாலை போடுவதை நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை அருகே மழைநேரத்தில் சாலை போடுவதை நிறுத்த வேண்டுமென, நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பணித்துறையினரை கோரியுள்ளனர்.

மதுரை சிக்கந்தர் சாவடியிலிருந்து- ஆணையூர் பிரிவு வரை சாலை போட டெண்டர் விடப்பட்டு, மதுரையிலை மழை நேரத்தில் அவசர கோலமாக இந்த சாலை போடப்படுவதாகவும், மழை நேரத்தில் சாலை போடப்படுவதால், சாலை தரமானதாக அமையாது என, சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்களாம்.

மழை காலங்களில் சாலைகளை போடாமல், வெய்யில் நேரங்களில் சாலைகளை அமைக்க வேண்டும், இப் பகுதியில் குடியிருப்போர் கோரியுள்ளனர். ஆகவே, இனி வரும் காலங்களில் சாலை சீரமைப் பணிகளை மழை காலங்களில் மேற்க் கொள்ளக் கூடாது எனவும் கோரியுள்ளனர்.