வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் தேங்காய் ஏலம்.!

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கடந்த 11 வாரங்களாக பிரதி புதன்கிழமை தோறும் பகல் 12 மணிக்கு நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற ஏலத்தில் 8 விவசாயிகளின் 12780 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்திற்கு மதுரை விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த ஏலத்தில் 11 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில் மாவட்டத்திலேயே இதுவரை இல்லாத அதிகபட்சமாக விலையாக ரூ18.10 க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் தீபாவளி பண்டிகை காலமானதால் அனைத்து விவசாயிகளும் நல்ல விலை கிடைத்தது என , மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் ரூபாய் 1.98 லட்சம் உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.