சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கையெழுத்து இயக்கம் துவக்கம்

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக தேசிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது . சட்டமன்றத் தொகுதிக்கு 25 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் துவக்கப்பட்டது.

நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். வாடிப்பட்டி தெற்கு வட்டார தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், எஸ்ஸிதுறை மாநிலத்துணை தலைவர் மூர்த்தி, மதுரை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் செல்லப்பா சரவணன், ஓபிசி மாவட்ட தலைவர் முருகன் ,வடக்கு மாவட்ட பொருளாளர் நூர் முகமது, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இளவரசன் உள்ளிட்டோர் படிவத்தை வழங்கினார். வாடிப்பட்டி மணி ,கனகராஜ், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் வாடிப்பட்டி நகர தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.